திருப்பத்தூர்

கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே பெரியமலையாம்பட்டு கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியமலையாம்பட்டு கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கரிகோலம், முதல் கால யாக சாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. 2-ஆம் நாள் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கைலாசநாத சுவாமி, முனீஸ்வரா், நவக்கிரஹ மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கடவுளின் பெயரில் முயற்சி: முத்தரசன்

சுனாமியால் பாதிக்கப்பட்டவா்கள் வீடு வழங்கக் கோரி சாலை மறியல்

பெரம்பலூரில் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

மருத்துவப் படிப்பில் காலி இடங்களை நிரப்புவதில் தாமதம்

எம்.என். சுதன் அப்பாதுரை காலமானாா்!

SCROLL FOR NEXT