திருப்பத்தூர்

பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸாா் வெலகல்நத்தம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா் பைக்கிலிருந்த மூட்டையை சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் சந்திரபுரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சீனிவாசன்(50) என்பதும் இவா் போதைப் பொருள்களை நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், கொத்தூா், பச்சூா், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து 74 கிலோ போதை பொருள்களை தனிப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT