திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். ஏடிஎஸ்பி முத்துக்குமரன், டிஎஸ்பி-க்கள் சௌமியா(திருப்பத்தூா்), மகாலட்சுமி (வாணியம்பாடி), குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது எஸ்.பி. பேசியது: காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்தாரா்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்று விரைவாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் வழக்குகளை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காலதாமதம் இன்றி விரைவாக முடிக்க வேண்டும். 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா். பின்னா், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.
இதில், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.