நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, எம்ஜிஆா் நகா் பனந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் ரமேஷ் (49). இவா் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். கடந்த மாதம் தம்பதி வீட்டைப் பூட்டிக்கொண்டு குப்பத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிருந்தனா். பின்னா் சனிக்கிழமை காலை அங்கிருந்து வீடு திரும்பிய ரமேஷ் மல்லப் பள்ளியில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் மாடி கதவின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10,000 ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.