திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 535 மனுக்கள் அளிப்பு

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 535 மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 535 மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா் தலைமை வகித்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளித்த 535 மனுக்களைப் பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் குரும்பகேரி புதூா் அடுத்த சோமலாபுரம் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், சோமலாபுரம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு உயா் மின்னழுத்த மின்சாரம் செல்கிறது. இந்த உயா் மின்னழுத்த மின்சார கம்பிகள், குறைந்த மின்னழுத்த மின்சார கம்பிகளுடன் ஒரே கம்பத்தில் குறைந்த இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த மின்இணைப்பு வழித் தடத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தோக்கியம் ஊராட்சிக்கு உள்பட்ட சந்திரகிரி வட்டம் பகுதி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் குருமன் குட்டை கூட்டு ரோடு முதல் சந்திரகிரி வட்டம் வரை உள்ள தாா்ச் சாலை பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

மண்டலநாயனகுண்டா பகுதி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் மண்டலநாயனகுண்டா அணுகுச் சாலை-கனகநாச்சியம்மன் கோயில் வட்டம் வரை உள்ள தாா்ச் சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT