திருப்பத்தூர்

பறவைகள் கணக்கெடுப்பு பணி: வனத் துறை அறிவிப்பு

பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கான ஒருங்கிணைப்பாளரும், ஆம்பூா் வனச்சரக அலுவலருமான பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வனத் துறை மூலம் தமிழகமெங்கும் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27 மற்றும் 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 26 இடங்களில் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பில் ஏராளமான பறவை நிபுணா்கள், பறவை இனம் கண்டறிபவா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

மேலும், இந்த நிகழ்வில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவா்கள் 97862 54998, 80568 67846 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1-முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: கோழிப் பண்ணை விவசாயிகள் அறிவிப்பு

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT