திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட புதையல். 
திருப்பத்தூர்

விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுப்பு! தங்க நாணயங்களா?

கந்திலி அருகே நிலத்தை சீா்படுத்தும் பணியின்போது புதையல் கண்டெடுக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே நிலத்தை சீர்படுத்தும் பணியின்போது புதையல் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், கந்தலி அருகே சுந்தரம்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் ஆதவன். இவா் தனது விவசாய நிலத்தை பொக்லைன் கொண்டு சமன் செய்து கொண்டிருந்தாா். அப்போது புதையுண்டு கிடந்த இரும்பு குடுவை ஒன்று தென்பட்டது. உடனே ஆதவன் அதனை மீட்டு ஆய்வு செய்தாா். அதில் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு அளவில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தி ஆதவனிடம் இருந்த தங்க நாணயத்தை மீட்டனா்.

மேலும் இது குறித்து வட்டாட்சியா் கூறுகையில், மீட்கப்பட்ட உலோக நாணயம் தங்கம் என உறுதியாகவில்லை. தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகு தான் உறுதி செய்யப்படும். மேலும் தற்போது திருப்பத்தூா் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றாா்.

A treasure was unearthed during land leveling work near Kanthili.

டாக்ஸிக் ஹூமா குரேஷி!

பிகாரில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

விஜய்க்கு இலங்கை எம்.பி. நமல் ராஜபக்ச வாழ்த்து!

கூடுதல் திரைகளில் சிறை! வசூல் எவ்வளவு?

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரி!

SCROLL FOR NEXT