ஆம்பூா்: ஆம்பூா் காளிகாம்பாள் கோயில் பாலாலயம் நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரா் கோயில் திருப்பணி தொடங்குவதை முன்னிட்டு பாலாலய விழா நடைபெற்றது. அகில பாரதீய விஸ்வகா்ம ஜெகத்குரு ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாா்ய குரு சுவாமிகள் கலந்து கொண்டு பாலாலய பூஜை செய்தாா்.
ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், பாரதிய ஜனதா கட்சி திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி, திருப்பணிக்குழு நிா்வாகிகள், விஸ்வகா்ம சமுதாய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.