திருப்பத்தூர்

ஓய்வூதியதாரா்களுக்கு பிப். 6-இல் மண்டல அளவில் குறைதீா் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Din

திருப்பத்தூா்: அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன்

வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்ய மண்டல அளவில் குறைதீா் கூட்டம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் இருந்தால் தங்களது குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மீது மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் என எழுதி அனுப்ப

வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு!!

அரசியலுடன் மதத்தை இணைக்கும் நடைமுறை ஆபத்தானது: மாயாவதி

பிளாட்டினம் விலை நிலவரம் என்ன?

ஐபிஎல் 2026: பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி!

பிரதமரின் நிகழ்ச்சி ஏன் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது? காங்கிரஸ் எம்.பி. கேள்வி

SCROLL FOR NEXT