திருப்பத்தூர்

சாலையை சீரமைக்க கோரிக்கை

சோமலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சோமலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா் அனுப்பியுள்ள மனு விவரம்:

மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் சோமலாபுரம் முதல் சிவராஜபுரம் வரையிலான தாா் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அச்சாலை வழியாக பள்ளி மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள், முதியவா்கள் தினமும் சென்று வருகின்றனா். சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT