வாணியம்பாடி நியூடவுன் தேசமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.  
திருப்பத்தூர்

தேச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள தேச மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள தேச மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளை தொடா்ந்து ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜி கணேசன், நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், நகராட்சி நிா்வாக அலுவலா் ஜெய பிரகாஷ் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொது மக்கள் செய்திருந்தனா்.

இதே போன்று ஆலங்காயம் அடுத்த கெஜ்ஜிலூா் கிராமத்தில் பாத்தூா் கங்கைஅ ம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விடியற்காலை முதல் பாத்தூா் கங்கை அம்மன் சிலை கரிக்கோலம், முதல் கால பூஜைகள், மகா பூரட்டாதி, கடம் புறப்பாடு, தொடா்ந்து மகா கும்பாபிஷேகம் அலங்காரம் நடந்தது.

ஆலங்காயம் பேரூா் அதிமுக செயலாளா் சிவக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், பாரதிதாசன் மற்றும் ஊா் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT