திருப்பத்தூர்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.72 லட்சம் திருட்டு

நாட்டறம்பள்ளியில் வங்கியிலிருந்து எடுத்து பைக்கில் வைத்திருந்த ரூ. 2.72 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் வங்கியிலிருந்து எடுத்து பைக்கில் வைத்திருந்த ரூ. 2.72 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (35), ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் நாட்டறம்பள்ளி ஏரி கோடி பகுதியில் இயங்கும் வங்கிக்குச் சென்று வங்கியில் இருந்து ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கி எதிரில் நிறுத்தியிருந்த பைக்கின் டேங்க் கவரில் வைத்துள்ளாா். சிறிது நேரம் கழித்து பெருமாள் ஆதாா் காா்டு, வங்கி புத்தக ஜெராக்ஸ் நகலை வங்கி அதிகாரியிடம் கொடுக்க மீண்டும் வங்கிக்கு உள்ளே சென்றுள்ளாா். அப்போது மா்ம நபா்கள் பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT