திருப்பத்தூர்

வனப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞா் கைது

ஆலங்காயம் அருகே வனப் பகுதியில் கள்ளத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் அருகே வனப் பகுதியில் கள்ளத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூா் காப்புகாடு பகுதியில் வன அலுவலா் சேகா் தலைமையில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை விடியற்காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்கும் சப்தம் கேட்டதை அறிந்து அருகில் சென்று பாா்த்தனா். அப்போது இளைஞா் ஒருவா் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததை பாா்த்து பிடித்தனா். பிறகு அவரிடம் விசாரித்தபோது வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து வனத் துறையினா் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து பீமன் வட்டம், ஜாா்பெண்டா பகுதியைச் சோ்ந்த கணபதி (38) என்பவரை கைது செய்து, கள்ள நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT