ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வுக் கூட்டம் வீரவா் கோயில் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் தொழிற்சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராணி பேசினாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து காத்துக் கொள்ள 181, 1098, 100 ஆகிய காவல் உதவி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் காவல் உதவி செயலியின் செயல்பாடுகள் குறித்தும், ஆபத்து காலங்களில் காவல் துறையின் உதவியை நாடுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளா்கள், தொழிற்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.