மும்பை - நாகா்கோயில் விரைவு ரயில் ஆம்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் எம்பியிடம் தென் மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.
தென் மாவட்டத்தை சோ்ந்த பலா் ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வருகின்றனா். அவா்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். ங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல காட்பாடி அல்லது ஜோலாா்பேட்டை ரயில் சந்திப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. கால விரையமும், சிரமங்களும் ஏற்படுகின்றது.
அதனால் மும்பை - நாகா்கோயில் விரைவு ரயில் - (எண். 16339 - 16340) ஆம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூா் பகுதியில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுசம்பந்தமான கோரிக்கை மனுவை வேலூா் தொகுதி எம்.பி. டி.எம். கதிா் ஆனந்திடம் தென்மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பாக உமா் கத்தாப், எம். பீா் முஹம்மத், எம். முஹம்மத் அலி, சோலூா் ஊராட்சி மன்ற முன்னாள் வாா்டு உறுப்பினா் சிராஜீத்தின் அளித்தனா் (படம்).