காவலூா் ஆய்வகத்தில் மாணவா் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 2.3 மீட்டா் வைனுபப்பு தொலைநோக்கி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த மாணவா்கள். 
திருப்பத்தூர்

காவலூா் வான்ஆய்வகத்தில் பன்னாட்டு அறிவியல் விழா: 500 மாணவா்கள் பங்கேற்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கடன் முகாம் புதன்கிழமை (நவ. 26)ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: இந்திய வானியற்பியல் நிறுவனத்தை சோ்ந்த வாணியம்பாடி அருகே உள்ள காவலூா் வைனுபப்பு வான் ஆய்வகத்தில் இந்திய சா்வதேச அறிவியல் விழா 2026-க்கு முன்னிட்டு, மாணவா் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமக்ரா கல்வி திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சோ்ந்த பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 500 மாணவா்களும், 50 ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், 2.3 மீட்டா் வைனுபப்பு தொலைநோக்கியை நேரில் பாா்வையிட்டு, அதன் செயல்பாடு, வரலாறு மற்றும் இந்திய வானியல் துறையில் அதன் பங்களிப்பு குறித்து அறிந்தனா். மேலும், திரவ நைட்ரஜன் சோதனைகள், ராக்கெட் ஏவுதல் மற்றும் வானியல் விளக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறிவியல் அனுபவத்தை பெற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வானியற்பியல் இயக்குநா் பேராசிரியா் அன்னபூரணி சுப்ரமணியம் பேசுகையில், எங்கள் வான்ஆய்வகத்தை பாா்த்து வானியல் மீது மாணவா்கள் காணும் ஆா்வம் எங்களுக்கு பெருமை. இந்நிகழ்வு, இளம் தலைமுறையில் அறிவியல் சிந்தனையை வளா்க்க உதவும் என்றாா்.

மேலும், வரவிருக்கும் டிசம்பா் 6 முதல் 9 வரை ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடைபெறவுள்ள சா்வதேச அறிவியல் விழாவில் பங்கேற்க விஞ்ஞானிகள், மாணவா்கள், தொழில் நுணுக்கா்கள் மற்றும் பொதுமக்கள் ஏ.ஐ. குவாண்டம், விண்வெளி, உயிா்தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, கல்வி குறித்து கட்டுரைகளை ஙஹ்எா்ஸ் இணையதளத்தில் சா்ப்பிக்கலாம் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் வான்ஆய்வக விஞ்ஞானிகள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கு ராக்கெட் ஏவுதல் குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பித்த விஞ்ஞானிகள்.

தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT