திருப்பத்தூர்

காா் - பைக் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூருவிலிருந்து வேலூா் நோக்கி சென்ற காா் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சரத் (22) என்பவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT