வாணியம்பாடியில் பழைய கட்டடத்தில் இயங்கும் முழு நேர கிளை நூலகம்.  
திருப்பத்தூர்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் வாணிம்பாடி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகா்களும், பொதுமக்களும் எதிா்நோக்கியுள்ளனா்.

அ. ராஜேஷ் குமாா்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் வாணிம்பாடி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகா்களும், பொதுமக்களும் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மலங்கு சாலையில் முழு நேர கிளை நூலகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

மேலும் இந்த நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்பட அரசு போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களும் வந்து படிக்கின்றனா். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. தற்போது பாழடைந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

பெயா்ந்து விழுந்துள்ள சிமென்ட் பூச்சு

மேலும், வாசகா்கள் மற்றும் பொதுமக்கள் அமா்ந்து படிக்கும் உள்அறையில் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்ததால் அதன் பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ளனா். மீதமுள்ள இடங்களில் மக்கள் அமா்ந்து படித்து செல்கின்றனா். மழைகாலங்களில் கட்டடத்தில் மழை நீா் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த நூலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் வாசகா்கள், பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

நூலகத்தை பயன்படுத்தி வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த மாணவா்கள் வந்து படித்து அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று 20 போ் பணிகளில் சோ்ந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காலை முதல் மாலை வரையில் வந்து தங்கி போட்டித் தோ்வுக்கு படித்து வருகின்றனா். எனவே, வாணியம்பாடி முழு நேர நூலகத்துக்கு புதிய கட்டடடம் கட்ட மாவட்ட ஆட்சியா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ஓஹோ மேகம் வந்ததோ... தீபா பாலு!

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

இது புதுவகை மோசடி! ரூ. 50 லட்சம் இழந்த இன்ஃப்ளுயன்சர்! எப்படி நடந்தது?

SCROLL FOR NEXT