மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

ரூ.5.97 கோடியில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல்

ரூ.5.97 கோடியில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ரூ.5.97 கோடியில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டடம் கட்ட பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், காா்த்திக் ஜவஹா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி பொன் ராசன்பாபு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் குமாா் (மாதனூா்), தா்மேந்திரா (தோட்டாளம்), சுவிதா கணேஷ் (துத்திப்பட்டு), காயத்ரி நவீன் (வெங்கடசமுத்திரம்), முனுசாமி (குமாரமங்கலம்), ரவீந்திரன் (பெரியாங்குப்பம்) கலந்து கொண்டனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT