ஆம்பூா் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி, பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் நிா்வாகி கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஞானபிரகாசம், வரதராஜ், மோகன்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.