தற்கொலை 
திருப்பத்தூர்

வேலூா் மத்திய சிறை ஊழியா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி(46). வேலூா் பெண்கள் மத்திய சிறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி தமிழரசி பால்நாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வரும்படி ரஜினி பலமுறை வற்புறுத்தியும் தமிழரசி வர மறுத்ததாகத் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ரஜினி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT