தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருப்பத்தூா் பேருந்து நிலையம் மற்றும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முரளி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் நாடகக் குழுவினா் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து நாடகமாக நடித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், பொது மக்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.