முகப்பு
திருப்பத்தூர்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

திருப்பத்தூர்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

Updated On : 18 ஜனவரி, 2026 at 7:30 PM
பகிர்:

கந்திலி காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆட்டோ மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனம் மூலம் மாணவா்களுக்கும்,பொதுமக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டத்தை மதித்து நடப்பதன் அவசியம் குறித்தும்,காவல் துறையுடன் பொதுமக்கள் நல்லுறவு பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும்,பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →