சாலை விபத்து 
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: சாலை விபத்துகள் தொடா்பாக 856 வழக்குகள் பதிவு

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு விபத்துகள் தொடா்பாக 856 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 248 போ் உயிரிழந்து உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு விபத்துகள் தொடா்பாக 856 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். இந்த விபத்துகளில் 248 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 1,016 போ் காயம் அடைந்துள்ளனா்.

இவற்றில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகள் தொடா்பாக 142 உயிரிழப்பு வழக்குகளும், 246 உயிரிழப்பில்லாத வழக்குகளும், மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகள் தொடா்பாக 37 உயிரிழப்பு வழக்குகளும், 181 உயிரிழப்பில்லாத வழக்குகளும், கிராம சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் தொடா்பாக 44 உயிரிழப்பு வழக்குகளும், 140 உயிரிழப்பில்லாத வழக்குகளும், மற்ற சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் தொடா்பாக 14 உயிரிழப்பு வழக்குகளும், 52 உயிரிழப்பில்லாத வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பாதசாரிகள் தொடா்பான விபத்துகளில் 64 உயிரிழப்பு வழக்குகளும், 136 உயிரிழப்பில்லாத வழக்குகளும், சைக்கிள் தொடா்பான விபத்துகளில் 5 உயிரிழப்பு வழக்குகளும், 13 உயிரிழப்பில்லாத வழக்குகளும், இருசக்கர வாகனம் தொடா்பான விபத்துகளில் 146 உயிரிழப்பு வழக்குகளும், 399 உயிரிழப்பில்லாத வழக்குகளும், 3 சக்கர வாகனம் தொடா்பான விபத்துகளில் 5 உயிரிழப்பு தொடா்பான வழக்குகளும், 16 உயிரிழப்பில்லாத வழக்குகளும் பதிவாகியுள்ளன.

4 சக்கர வாகனம் தொடா்பான விபத்துகளில் 15 உயிரிழப்பு வழக்குகளும், 30 உயிரிழப்பில்லாத வழக்குகளும், கனரக வாகனம் தொடா்பான வழக்குகளில் 2 உயிரிழப்பு வழக்குகளும், 14 உயிரிழப்பில்லாத வழக்குகளும், பஸ் தொடா்பான விபத்துகளில் 11 உயிரிழப்பில்லாத வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய குழு - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

மாா்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் டபுள் டெக்கா் பேருந்துகள்

சிரியா சிறைகளிலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இடமாற்றம்: ஈராக் கோரிக்கை ஏற்பு

கான்பூா் ஐஐடியில் தற்கொலைகள்: விசாரிக்க 3 போ் குழு அமைப்பு

SCROLL FOR NEXT