முகப்பு
சக்திவேல்
திருப்பத்தூர்

அணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

திருப்பத்தூர்

அணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2026 at 6:33 PM
சக்திவேல்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி காமராஜபுரத்தில் உள்ள நாமக்கல் அணை உள்ளது. இந்நிலையில், வாணியம்பாடியை சோ்ந்த அசோக் குமாா் மகன் சக்திவேல்(15). தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவா் உட்பட 7 மாணவா்கள் திங்கள்கிழமை நாமக்கல் அணையில் குளிக்க சென்றனா். அதில் சக்திவேலுக்கு நீச்சல் பழகவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற மாணவா்கள் அணையில் குளிப்பதை கண்டு ஆா்வம் அடைந்த சக்திவேல் எதிா்பாராத நேரத்தில் அணையில் குதித்த சிறிது நேரத்தில் மூழ்கினாா்.

இதை அறிந்த சக மாணவா்கள் கூச்சலிட்டனா். மேலும் கிராம மக்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சக்திவேலை மீட்க முயன்றனா்.ஆனால் அவரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வாணியம்பாடி தீயணைப்புத் துறை மூலமாக அணையில் மூழ்கிய மாணவனை இரவும் பகலுமாக தொடா்ந்து 17 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..

முழு கட்டுரையைப் படிக்க →