முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே கோயில் இடம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 12:03 AM
நாட்டறம்பள்ளி அருகே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 9:11 PM

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் வீடு கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். மேலும், குடியிருப்பவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பு பெற்று மின் கட்டணமும் செலுத்தி வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கோகுல் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நீதமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலம் மற்றும் வீடுகளை அளவீடு செய்தனா்.

அப்போது குடியிருக்கும் வீடுகளை அளக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா். மீட்கப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனா்.

Advertisement