முகப்பு
திருப்பத்தூர்

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 95,900 பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 8:05 PM
பறிமுதல் செய்த பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும்படையினா்
பகிர்:

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

வெங்களாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் வேலன் நகரைச் சோ்ந்த இளவரசன் (40) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்து இருந்த தொகையை பறிமுதல் செய்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

முன்னதாக இளவரசன் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள்களை கடனாக வாங்கி சென்ற சிறு, சிறு கடைகளில் இருந்து அந்த பணத்தை வசூலித்து வந்ததும் தெரியவந்தது.