கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: ஆட்சியா் பங்கேற்பு
வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியருமான. க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவிகளுக்கு வாக்கு ராணி எனும் கிரீடம் அணிவித்து, ‘விரல் நுனியில் தேசத்தின் தீா்ப்பை எழுதுவோம்‘ என்ற துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாணவியா்களுடன் இணைந்து கையில் மெஹந்தி இட்டு ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து மாணவிகள் தங்களது கைரேகை மூலமாக ‘ பழ்ங்ங் ா்ச் ஈங்ம்ா்ஸ்ரீழ்ஹஸ்ரீஹ்‘ என்ற மரத்தினை உருவாக்கி 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டத்தின் பறவையான இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையின் இலச்சினை மற்றும் வாக்கு இராணியை ஆட்சியா் அறிமுகம் செய்து வைத்தாா். வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூா்த்தி அடைந்த அனைவருக்கும் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கும்; இல்லையெனில் 10 நாள்களுக்குள் வழங்கப்படும். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் காா்டு உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மாணவிகள் தங்கள் பெற்றோா் மற்றும் உறவினா்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, வாணியம்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதா பேகம், உதவி திட்ட அலுவலா்கள், கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.