திருவள்ளூர்

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில்  25 பவுன் நகை திருட்டு

DIN

திருத்தணியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர்.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட குமரன் நகரைச் சேர்ந்தவர் உமாபதி (60). இவர், ஓய்வு பெற்ற தலைமையா
சிரியர்.   இந்நிலையில் உமாபதி, புதன்
கிழமை வீட்டை பூட்டிவிட்டு, வங்கிச் சென்றார்.
பின்னர், திரும்பிய வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வர
வழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.   இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT