திருவள்ளூர்

எரியாத மின் விளக்குகள்: தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

திருநின்றவூர் பேரூராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.

DIN

திருநின்றவூர் பேரூராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
திருநின்றவூர் பேரூராட்சியில் 13-ஆவது வார்டில் உள்ள கம்பர் தெரு, பாரதியார் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை
எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருநின்றவூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கிளை செயலாளர் பி.பசுபதி தலைமையில் தீப்பந்தம் ஏந்தி நூதனப் போராட்டம் நடத்தினர்.  
இதில், சங்க நிர்வாகிகள் மகேஷ்பாலு, அபினேஷ், செந்தில், ராஜா, பச்சையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT