திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

அம்பத்தூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

அம்பத்தூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் சந்திரசேகர்புரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சலீம் (33). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சமீபத்தில் நாடு திரும்பினார். இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர், பீரோவிலிருந்த 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், இரவு வீடு திரும்பிய சலீம் குடும்பத்தினர், நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து அம்பத்தூர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT