திருவள்ளூர்

சொந்தம் கல்விச்சோலையில் இன்று 8-ஆம் ஆண்டு விழா: தினமணி ஆசிரியர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் சொந்தம் கல்விச்சோலை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் 8-ஆம் ஆண்டு விழா கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

DIN

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் சொந்தம் கல்விச்சோலை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் 8-ஆம் ஆண்டு விழா கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
 கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.பி ஸ்ரீமஹாலில் நடைபெற உள்ள இந்த விழாவில், பயிற்சி முடித்து அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளவர்களுக்கு பாராட்டு விழாவும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
 நிகழ்ச்சியில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழக வேளாண்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஏ.எம்.காசி விஸ்வநாதன், திருவள்ளூர் சார் - ஆட்சியர் டி.ரத்னா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத் ஆகியோர் பங்கேற்று, சிறப்புரையாற்ற உள்ளனர்.
 விழா ஏற்பாடுகளை சொந்தம் கல்விச்சோலை இயக்குநர் இராச.முகுந்தன், நிறுவனர் எம்.சேகர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT