முகப்பு
திருவள்ளூர்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் இயக்கி வைப்பு

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, கிராமங்கள் தோறும் பொதுமக்களுக்கு

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:44 am IST
பகிர்:

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, கிராமங்கள் தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசார வாகனத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். 
 ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்து, அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராமங்கள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசார வாகனங்களின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து, பிரசார வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
இந்த வாகனங்கள் மூலம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வீதி வீதியாக பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன. 
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குமார், நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.