திருவள்ளூர்

பொன்னேரி பேரவைத் தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

DIN

பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் ஏப். 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், பொன்னேரி சட்டப் பேரவை தொகுதியில் 310 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இம்முறை வாக்காளர்கள்  யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 310 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வளக் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப் பதிவு மையங்களில் இந்த இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டால் உடனடித் தேவைக்காக 53 மாற்று  இயந்திரங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பொன்னேரி தனி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான நந்தகுமார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT