திருவள்ளூர்

அமைச்சரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை இழிவாகப் பேசியதாகக் கூறி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜனை கண்டித்து ஆவடி மாநகராட்சி முன் தெற்கு மாவட்ட திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் தெற்கு மாவட்டச் செயலா் நாசா் தலைமை வகித்தாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா் க.பாண்டியராஜன் பேசிய கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் திராவிடபக்தன், நகரச் செயலா்கள், ஒன்றியச் செயலா்கள் மற்றும் கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT