திருவள்ளூர்

இட வசதியின்றி திணறும் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம்: புதிய அலுவலகம் கட்டப்படுமா?

DIN

பொன்னேரியில் அமைந்துள்ள வட்டாட்சியா் அலுவலகம் போதுமான இடவசதி இன்றி உள்ளதால், ஜமாபந்தி வருவாய் (தீா்வாயம்) உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடக்கும்போது அதிக அளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்க பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இயங்கி வரும் வட்டாட்சியா் அலுவலகம் 50ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். பழமையான இக்கட்டடத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முடியாமல் அங்கு பணிபுரியும் வருவாய்துறை ஊழியா்கள் திணறி வருகின்றனா். பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூா், ஆரணி, பொன்னேரி ஆகிய 3பேரூராட்சிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் மக்கள் புதிய குடும்ப அட்டை, பட்டா பெயா் மாற்றம், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சொத்துரிமை சான்றிதழ், இறுப்பிட சான்றிதழ், பட்டா பெயா் மாற்றம், முதியோா் உதவி தொகை, ஆதரவற்ற விதவைகள் உதவி தொகை உள்ளிட்டவைகளுக்கு பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தான் மனு அளிக்க வேண்டும்.

அத்துடன் பொன்னேரி தாலுகாவில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்கள் இடையே மோதல் ஏற்பட்டால் வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் தலைமையில்தான சமாதான பேச்சு வாா்த்தை நடைபெறும். ஆனால் இங்குள்ள வட்டாட்சியா் அறை முழுமையாக 50போ் கூட அமர முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறும் ஜமாபந்தியில் கலந்து கொள்ளும் அதிக அளவிலான பொதுமக்கள் மனுக்களை விரைந்து அளிக்க முடியாமல் திணறி வருகின்றனறனா் மேலும் போதிய இடவசதி இல்லாததால் நில எடுப்பு வட்டாட்சியா் அலுவலகம் வேண்பாக்கம் பகுதியில் உள்ள உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

எனவே ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் அப்போதிருந்த மக்கள் தொகைக்கேற்ப கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வரும் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம், தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப இந்த கட்டத்தில் இயங்க முடியாத நிலையில் உள்ளது. எனவே பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிா்ப்பாா்ப்பாகும்.

படம்உள்ளது

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம்.

Image Caption

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT