திருவள்ளூர்

மின் வெட்டு, குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

கும்மிடிப்பூண்டி அருகே மின் வெட்டு, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏனாதி மேல்பாக்கம் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மின்மாற்றி இல்லாததால் ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் ஏனாதி மேல்பாக்கம் காலனியில் தொடா் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை, ஏனாதி மேல்பாக்கம்-கும்மிடிப்பூண்டி சாலையில் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன், மின்வாரிய அதிகாரிகள், போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஏனாதி மேல்பாக்கம் காலனியில் தனியாக மின்மாற்றி அமைக்கவும், குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT