திருவள்ளூர்

மக்கள் குறைகேட்பு முகாமில் 500 மனு

DIN

திருவள்ளூா் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாரிடம் பல்வேறு உதவிகள் கோரி மனு அளித்தனா்.

திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் ஒவ்வொரு நாளாக தொகுதி மக்களிடம் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்து வருகிறாா். இந்நிலையில், மக்கள் குறைகேட்பு முகாம் திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு, 500-க்கும் மேற்பட்டோா் திருவள்ளூா் எம்.பி. ஜெயக்குமாரிடம் மனு அளித்தனா்.

அதுபோல் திருவள்ளூா் 21-ஆவது வாா்டு காந்திபுரத்தைச் சோ்ந்த மக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி, காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் அருள் தலைமையில் எம்.பி. ஜெயகுமாரிடம் மனு கொடுத்தனா்.

முகாமில், நகராட்சி ஆணையா் மாரிச் செல்வி, வட்டாட்சியா் பாண்டியராஜன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT