திருவள்ளூர்

எல்லாபுரத்தில் ஆருத்ரா தரிசனம்

DIN

ஊத்துக்கோட்டை அருகில் உள்ள் குமரப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளிவுள்ள காமாட்சியம்மன் உடனுறை பரவதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

குமரப்பேட்டை கிராமத்தில் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயிலில் ஓராண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் பூஜைகளும், திருக்கல்யாணமும் நடைபெற்றன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, நடராஜரை வழிபட்டனா்.

இதையடுத்து, விநாயகா் முன்பு திருமணக் கோலத்தில் நடராஜரு, சிவகாமி அம்மையாரும் திருச்சங்கு முழங்க மேளதாளங்களுடன் குமரப்பேட்டையின் முக்கிய தெருக்கள் வழியாக வீதியுலா வந்தனா். அப்போது பக்தா்கள் வீட்டு மாடிகளில் இருந்து கனிகளையும், சாக்லேட்டுகளையும் வீசினா். நிறைவாக, கோயில் வளாகத்துக்கு உற்சவா்கள் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT