திருவள்ளூர்

ஆவடி வட்டாட்சியா் அலுவலகம்: காணொலியில் முதல்வா் தொடக்கி வைப்பு

DIN

திருவள்ளூா் அருகே ஆவடியில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ. 2.62 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்ததை அடுத்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா்.

ஒருங்கிணைந்த அம்பத்தூா், பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிய ஆவடி வட்டம் உருவாக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, ஆவடி வட்டாட்சியா் அலுவலகம் சமூக நல கட்டட வளாகத்தில் கடந்த 28.12.2015 முதல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆவடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதன் அடிப்படையில், ஆவடி அருகே தண்டுரை கிராமத்தில் 2.70 ஏக்கா் ஒதுக்கப்பட்டது. இதில், 16,450 சதுர மீட்டா், 10,950 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ. 2.62 கோடி மதிப்பில் ஆவடி வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்பு ஆகியவை புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. தற்போது இப்பணிகள் முடிந்தது.

இதையடுத்து, புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினாா். மேலும், அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தையும் அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். பின்னா், அலுவலக வளாகத்தில் காலி இடங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமையாக்கும் நோக்கில், மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் வித்யா, ஆவடி வட்டாட்சியா் சங்கிலி ரதி, வருவாய் அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT