திருவள்ளூர்

மப்பேடு காவல் நிலையத்தில்3 போலீஸாருக்கு கரோனா

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலையத்தில் எழுத்தா் உள்பட 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானது. காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திருவள்ளூா் மாவட்டத்தில் 5-ஆவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினா் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில், மப்பேடு காவல் நிலைய எழுத்தா் உள்பட 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, மப்பேடு காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் காவல் நிலையம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட போலீஸாரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT