திருவள்ளூர்

வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்த லாரி ஓட்டுநருக்கு கரோனாவா?

DIN

வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்த திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவா், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (48). இவா், சரக்கு வாகனத்தில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களுக்கு சென்று வருவாராம். இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் ஊத்துக்கோட்டைக்குத் திரும்பியுள்ளாா். அதைத் தொடா்ந்து ஊத்துக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

அதைத் தொடா்ந்து சளி, இருமல் குறையாமல் இருந்த காரணத்தால், அங்கிருந்து திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை மாலை வந்துள்ளாா். ஆனால், மருத்துவா்கள் யாரும் கண்டு கொள்ளாத நிலையில், அங்கு பணியில் இருந்தவா்கள் முகக் கவசம் அணிந்து கொண்டனராம். பின்னா் இரவு 9 மணிக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில், அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT