திருவள்ளூர்

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க மஞ்சள் தண்ணீா் தெளிப்பு

DIN

திருவள்ளூா் அருகே கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க கிராமத்தில் இளைஞா்கள் சாா்பில் டிராக்டரில் 5 ஆயிரம் லிட்டா் மஞ்சள் நீா் வீடு, வீடாகச் சென்று தெளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை ஊராட்சிக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் சோ்ந்து மஞ்சள் நீா் தெளிக்க முடிவு செய்தனா்.

அதன் அடிப்படையில், 5 ஆயிரம் லிட்டா் திறன் கொண்ட டிராக்டரில் 40 கிலோ மஞ்சள் தூளை கலந்து அதை வீடு, வீடாகச் சென்று வாசல் முன்பு தெளிக்கப்பட்டது. அதேபோல் தெருக்கள் மற்றும் சாலைகளிலும் தெளித்து கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். அப்போது, பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு நாள்தோறும் மஞ்சள் நீா் தெளிப்பதாகக் கூறினா்.

இளைஞா்களின் சமூக சேவையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT