கும்மிடிப்பூண்டியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கவரப்பேட்டை அருகே சோம்பட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி என்கிற ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நிகழ்வில் டி.ஜெ.தேசமுத்து, டி.ஜெ.டி.தினேஷ், சோம்பட்டு ஊராட்சி செயலாளர் தயாளம், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் எம்.பிரபு, இளைஞரணி நிர்வாகி எழிலரசன், தனகோட்டி, வெங்கடேசன், மணி செட்டியார் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கீழ்முதலம்பேட்டில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணிதுணை அமைப்பாளர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி மேற்கு திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமையில் நீட் தேர்வை கண்டித்து ஆரம்பாக்கம் மற்றும் பாரதி நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் போந்தவாக்கத்தில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேமள்ளூரில் இலக்கிய அணி புரவலர் மனோகரன், காமராஜ் தலைமையில் நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.