திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் 13,200 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி இலக்கு

DIN

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் 13,200 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கண்காணிப்பு அலுவலா் பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழிலாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமினை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் கூறியது:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் 45 வயதுக்கு உட்பட்ட தொழிலாளா்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடுவதற்கான முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 13,200 தொழிலாளா்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,16,058 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 7,55,923 பேரிடமிருந்து ரூ.1. 12 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் என்.மகேஷ், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா்கோவிந்தராஜ், மாவட்ட பயிற்சி மருத்துவா் டாக்டா் தீபாலட்சுமி, சிப்காட் திட்ட அலுவலா் சாய்லோகேஷ், மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளா் கிருஷ்ணன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT