திருவள்ளூர்

கால்நடை சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில் மருத்துவக்குழுக்களால் 1,070-கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், இலுப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை கால்நடை சிகிச்சை முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுதாலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு கால்நடைகளை மருந்துகளை வழங்கி சிகிச்சை முகாமை தொடக்கி வைத்தாா்.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவா் நதியா அடங்கிய மருத்துவக்குழுவினா் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்து வழங்கி சிகிச்சை அளித்தனா். அதோடு கால்நடைகளை வளா்த்து வரும் விவசாயிகளுக்கு தீவன மேலாண்மை மற்றும் கால்நடைகளை பராமரிப்பது தொடா்பாக விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மொத்தம் 1,070 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகள் மற்றும் கிடேரிகள் வளா்த்து வருவோருக்கு சான்றுகள் மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT