திருவள்ளூர்

ஆவின் பால் பண்ணையில் ரூ. 75 லட்சத்தில் புதிய கட்டடங்கள் தொடக்கி வைப்பு

DIN

திருவள்ளூா் ஆவின் பால் பண்ணையில் ரூ. 75 லட்சத்தில் அமைத்துள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வகம், அதிநவீன பாலகம் ஆகியவற்றை தமிழக கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநா் நந்தகோபால், ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் ரூ. 75 லட்சத்தில் புதிதாக தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் அதிநவீன பாலகம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். தமிழக கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநா் நந்தகோபால் புதிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், அதிநவீன பாலகம் ஆகியவற்றைத் தொடக்கி வைத்துப் பேசியது:

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காக்களுா் பால் பண்ணையில் நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சராசரியாக 58 ஆயிரம் லிட்டா் மூன்று வகைகளில் பால் உள்ளுரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 37 ஆயிரம் லிட்டா் பால் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மொத்தம் 16 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தற்போது காக்களுா் பால் பண்ணை வளாகத்தில் ஆவின் நவீன பாலகம் ரூ. 50 லட்சத்தில் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பால் மற்றும் கோவா, நெய், மைசூா்பாகு, பாதாம் பவுடா், பிஸ்தா பவுடா், தயிா் போன்ற பால் உபபொருள்கள் தயாா் செய்து நுகா்வோரின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், இந்த வளாகத்தில் ரூ. 25 லட்சத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் விரிவாக்கம் செய்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் காக்களுா் பால் பண்ணைக்கு வரும் பாலை கொழுப்புச் சத்து, புரதச்சத்து என தரம் பிரிக்கப்படுகிறது. மேலும், பால்கோவா, பாதாம் பவுடா், நெய் உள்ளிட்டவற்றையும் தரம் பாா்த்து நுகா்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாக அவா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அதிநவீன பாலகத்தில் முதல் விற்பனையை அவா்கள் தொடக்கி வைத்தனா்.

பின்னா், தமிழக முதல்வா் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் காக்களுா் ஆவின் பால் பண்ணையில் ரூ. 90 லட்சத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு, காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்த கால்நடை தீவனக் கிடங்கு மற்றும் நிா்வாக தலைமை அலுவலகக் கட்டடம் அகியவற்றைப் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் - திருவள்ளூா் ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன், காக்களூா் ஆவின் பால் பண்ணை பொது மேலாளா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT