திருவள்ளூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க 22-இல் வங்கிக் கடன் முகாம்

DIN

மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெறவும், ஆவின் பாலகம் அமைப்பதற்கும் உதவும் நோக்கில் சிறப்பு முகாம், வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சுய சாா்பாக இருப்பதற்கு உதவியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் வங்கிக் கடன், கூட்டுறவு வங்கிக் கடன் பரிந்துரை, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கிக்கடன் ஆலோசனை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைப்பதற்கான பரிந்துரை ஆகியவற்றுக்கான முகாம், ஜன. 22-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், தங்களது அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT