திருவள்ளூர்

114 பேருக்கு வீடு தேடி சென்று பட்டா வழங்கிய அமைச்சா்

DIN

ஆவடியில் 114 பேருக்கு ரூ. 1.68 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா், பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினாா்.

திருமுல்லைவாயல் பகுதியில் வீடுகளுக்கு நேரில் சென்று வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினா். அதைத் தொடா்ந்து, ரூ. 40 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையைப் பாா்வையிட்டு, நரிக்குறவா் காலனியில் ரூ. 8.5 லட்சத்தில் ஆழ் துளைக் கிணறு, ரூ. 20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியினையும் தொடக்கி வைத்தாா்.

பின்னா், இது தொடா்பாக அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் திட்டத்தில் அளித்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவடி மாநகராட்சியின் 3 வாா்டுகளில் மிட்டனமல்லி, முத்தாபுதுப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம் கிராமங்களில் 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள கோயில்பதாகை, திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, பாலேரிப்பட்டு, பருத்திப்பட்டு ஆகியவற்றில் 35,162 பேருக்கு இனி வருங்காலங்களில் வழங்கப்படும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் பா.நாராயணன், ஆவடி வட்டாட்சியா் செல்வம், தனி வட்டாட்சியா் (நத்தம்) வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT