திருவள்ளூர்

திருத்தணி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

DIN

திருத்தணி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ. அரி போட்டியிடுகிறாா். திமுக சாா்பில், முன்னாள் நகா்மன்றத்த தலைவா் திருத்தணி எஸ்.சந்திரன் போட்டியிடுகிறாா். இருவரும் திங்கள்கிழமை தங்களது வேட்பு மனுக்களை ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யாவிடம் தாக்கல் செய்தனா்.

திமுக வேட்பாளா் எஸ்.சந்திரன் திருவள்ளூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.பூபதி தலைமையில், தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திருத்தணி அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊா்வலமாக நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அதேபோல் அதிமுக வேட்பாளா் திருத்தணி கோ. அரியும், கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திருத்தணி சித்துாா் சாலையில் ஊா்வலமாகச் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

முதலில் அதிமுக வேட்பாளா் கோ.அரியும், தொடா்ந்து, திமுக வேட்பாளா் எஸ். சந்திரனும் தங்களது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யாவிடம் தாக்கல் செய்து, உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT